காதலர் தினத்தை முன்னிட்டு உயர்ந்த பூக்கள் விலை! ரோஜா கட்டு இவ்வளவா?

உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று கொண்டாடி வருகிறார்கள். அதைப்போல மோதிரம் மற்றும் பூக்கள் என காதலிக்கு வாங்கி கொடுத்து வருகிறார்கள். காதலர் தினம் வாரம்  தொடங்கிவிட்டது என்றாலே பூக்களின் விலை வழக்கமான விலையை விட சற்று உயர்ந்து இருக்கும்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

அந்த வகையில், இந்த ஆண்டு (2024) காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. அதன்படி, சென்னையில் ஒரே ஒரு ரோஜா பூவின் விலை 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே நேற்று ரோஜாப்பூக்களின் கட்டுக்களின் விலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து இன்று காதலர் தினம் என்பதால் பலரும் பூக்கள் வாங்க விரும்புவார்கள் என்பதால் பூக்கள் விலை இன்னுமே சற்று உயர்ந்து இன்று ரோஜா பூக்கள் கட்டின் விலை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கட்டில் 15 முதல் 16 ரோஜா பூக்கள் அடங்கும். அதைப்போல பிரவுன் நிற ரோஸ் பூக்களின் கட்டு விலை ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுதான் சரியான நேரம்….அதிரடியாக சரிந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம்…

பன்னீர் ரோஜா பூக்களின் விலை ஒரு கட்டு ரூ.200க்கு விற்பனை. அதே சமயம் சென்னையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.1,500க்கும் அரளி பூவின் விலை ரூ.100க்கும், கனகாம்பரம் விலை ரூ.900க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment