செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.  தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது.  லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது, செங்கல்பட்டில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காஞ்சிபுரத்தில் இரண்டு பகுதிகளில் மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.