ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இம்ரான் கான் கலந்துகொள்ளவில்லை .!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 19-வது கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். காணொலி காட்சி வழியாக நடைபெறுகிற இந்த கூட்டத்தில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் பிரதமர் கலந்துகொள்கிறார்கள்.

பாகிஸ்தான் சார்பில் அதன் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்வார்கள். இந்த மாநாட்டில் இம்ரான் கான் பதிலாக  பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொண்டார்.

இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, இம்ரான் கான் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொண்டனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan