சக்ரா உள்ளிட்ட 18 புதிய படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு.!

தியேட்டரில் கூட்டம் இல்லாத காரணத்தால் சக்ரா ,பூமி,மாறா உட்பட 18 புதிய படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது .அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் , கீர்த்தி சுரேஷின் பெங்குயின், சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க 10-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சந்தானம் நடித்த பிஸ்கோத் , மரிஜுவானா உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட்டது.ஆனால் தியேட்டரில் கொரோனா அச்சம் காரணமாக கூட்டம் இல்லாத காரணத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர் .

இதனால் பலர் தங்களது படங்களை தியேட்டரில் திரையிட யோசித்து வருகின்றனர் . அதனுடன் சிலர் ஓடிடியில் படத்தினை வெளியிடவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் ஓடிடியில் சுமார் 18 படங்களை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் பாரீஸ் பாரீஸ்,கர்ஜனை ,சர்வர் சுந்தரம்,ஜிந்தா,ஆட்கள் தேவை ,திகில் ,மாமா கிகி ,யாதுமாகி நின்றாய் ,ஹவாலா ,மதம் உட்பட 18 சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.அதே போன்று பெரிய பட்ஜெட் படங்களான சக்ரா ,பூமி , சைத்தான் கா பச்சா,மாறா ஆகிய படங்களையும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.