பாமாயிலுக்கு மத்திய அரசு தொடர் கரிசனம்.! சலுகைகள் காலவரம்பு மேலும் நீட்டிப்பு.!

வெளிநாட்டு பாமாயில் எண்ணெய் இறக்குமதி வரிசலுகை காலவறையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சமையல் எண்ணெய் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள காரணத்தால், அதன் தட்டுப்பாடை குறைக்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கபட்ட பாமாயில் எண்ணெய்க்கு வரிச்சலுகை இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் பாமாயில் எண்ணெய்க்கு இறக்குமதி வரி சலுகையானது இந்தாண்டு டிசம்பர் 31 வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக மையம் நிர்ணயம் செய்துள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தபடும் சமையல் எண்ணையில் 50 விழுக்காடு எண்ணெய் பாமாயில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment