புகைப்படம்.. வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளன.! ஏடிஎம் கொள்ளை குறித்து ஐஜி கண்ணன் விளக்கம்.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தவர்கள். ஆதாரங்கள் கிடைத்துள்ளன . தற்போது அவர்களை அடையாளப்படுத்துவது மட்டுமே இறுதி வேலை. என் ஐஜி கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் திருவண்ணாமலை பகுதியில் ஒரே இரவில் தொடர்ந்து நான்கு ஏடிஎம்களின் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் 75 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், அந்த ஏடிஎம் இயந்திரங்கள சேதப்படுத்தப்பட்டன. இதில் குற்றவாளிகளை பிடிக்க திருவண்ணாமலை காவல்துறையின்ர் சார்பில் ஏழு தனிப்படைகள் அமைத்து பல்வேறு மாநிலங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஐஜி கண்ணன் : இன்று காலையில் வந்த தகவலின் படி அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு நபரை பெங்களூரில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, தற்போது வடக்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்களிடம் இந்த கொள்ளை சம்பவம் குறித்தும் அதன் விசாரணை குறித்தும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

அரியானா மாநில கொள்ளையர்கள் : அவர் கூறுகையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொல்லையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கோலார் பகுதியில் தங்கியிருந்து, திருவண்ணாமலையை நோட்டமிட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது எனவும்,

குஜராத் : இதற்க்கு அடுத்து கோலார் பகுதியில் இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கொள்ளையர்கள் ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு பல்வேறு மாநிலங்களுக்கு தப்பி சொல்லும் போது, குஜராத் மாநிலத்தில் ஆறு பேரை தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

வழக்கு முடிந்துவிட்டது : அடுத்து, அரியானா மாநிலத்தில் இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் இருந்து மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் தெளிவாக கிடைத்துள்ளது. இந்த வழக்கு முடிவடைந்து விட்டது என்று ஐஜி தெரிவித்தார்.  கொள்ளையர்களின் புகைப்படங்கள் வீடியோக்கள் கிடைத்துள்ளது. தற்போது கொள்ளையர்களின் பெயர்கள்,  அவர்கள் வேறு ஏதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து மட்டுமே ஆராய்ந்து வருகிறோம் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment