கார் கேரேஜில் தீ விபத்து..! பல சொகுசு கார்கள் எரிந்து நாசம்..!

கார் கேரேஜில் தீ விபத்து..! பல சொகுசு கார்கள் எரிந்து நாசம்..!

பெங்களூரில் உள்ள கார் கேரேஜில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல சொகுசு கார்கள் எரிந்து நாசமானது.

பெங்களூரு, கஸ்தூரி நகரில் உள்ள கேரேஜ் தீ விபத்து ஏற்பட்டதில் பல வகைப்பட்ட உயர்ரக கார்கள் தீயில் சேதம் அடைந்தன. மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கஸ்தூரி நகரில் சிஎம்ஆர் சட்ட கல்லூரிக்கு அருகே உள்ள கார் கேரேஜில், தொழிலாளர்கள் பைக் ஸ்டார்ட்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, மின் கசிவு (ஷார்ட் சர்க்யூட்) ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

garage Fire 1
Image Source TwitterCitizenKamran

இந்த தீ சிறிது நேரத்தில் மற்ற வாகனங்களுக்கும் பரவியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கேரேஜுக்குள் இருந்த ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உயர்ரக கார்கள் சேதமடைந்தன.

garage Fire 2
Image Source TwitterCitizenKamran

மேலும் இந்த விபத்தில் கேரேஜில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை தீ விபத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *