30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

MBBS படிக்க விரும்பினால் நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் – ஆளுநர்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் பேச்சு.

சென்னை, ஆளுநர் மாளிகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினர். அப்போது பேசிய ஆளுநர், மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுபோன்று சட்டம் படிக்க விரும்புபவர்கள் சிறப்பான சட்ட பள்ளியை தேர்வு செய்ய வேண்டும். தொலைபேசியை மாணவர்கள் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் நீங்கள் எந்த துறையில் சேர்ந்து படித்தாலும் அதில் திறமையோடு விளங்க வேண்டும் அறிவுரை வழங்கினார்.

ஆளுநருடனான கலந்துரையாடலில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த நந்தினி மற்றும் நாமக்கல் மாணவியான திருநங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு விருது வழங்கி  ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.