விறுவிறுப்பாக நடைபெறும் கர்நாடகா தேர்தல்..! வாக்குகளை பதிவு செய்த காங்கிரஸ் தலைவர்கள்..!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது மனைவி ராதாபாய் கார்கே ஆகியோர் கலபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் வருணா தொகுதி வேட்பாளர் சித்தராமையா வாக்களித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது வாக்கைப் பதிவு செய்தார். மேலும், பிற்பகல் 11 மணி நிலவரப்படி 20.99% வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.