ட்விட்டரை தடை செய்தால் புதிய ஸ்மார்ட்போன் களமிறக்கப்படும்.! மஸ்க் அதிரடி முடிவு.!

ஆப்பிள் மற்றும் கூகுள், நிறுவனங்கள் ட்விட்டரை தடை செய்தால், நான் வேறு ஸ்மார்ட் போனை உருவாக்குவேன் என மஸ்க் கூறியுள்ளார்.

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கினால், சொந்தமாக புதிய ஓ.எஸ்(OS) மற்றும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவேன் என்று ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க், மறைமுகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க கன்சர்வேட்டிவ் (பழமைவாத) அரசியல் விமர்சகர் லிஸ் வீலர், ட்விட்டரில் இது குறித்து கேட்ட கேள்விக்கு மஸ்க் பதிலளித்துள்ளார்.

லிஸ் வீலர் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ட்விட்டரை நீக்கினால், எலான் மஸ்க் தனது சொந்த ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவாரா? என்று ட்விட்டர் கருத்துக்கணிப்பு ஒன்றை கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மஸ்க், கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் அப்படி ட்விட்டரை தடை செய்ய மாட்டார்கள், எனினும் அது நடந்தால் எனக்கு வேறு வழியில்லை. நான் வேறு போனை உருவாக்குவேன் என்று கூறியுள்ளார்.

லிஸ் வீலர் மேலும் கூறியதாவது, செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டை அனுப்பும் மஸ்கிற்கு ஸ்மார்ட் போன் தயாரிப்பது ஒன்றும் கடினமல்ல? என்று ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்க பத்திரிகைகளில் வெளியான கட்டுரையில், எலான் மஸ்க் முன்னர் ட்விட்டரில் தடை செய்யப்பட்ட நபர்களுக்கு மீண்டும் ட்விட்டரில் அனுமதி வழங்க இருக்கிறார். இதனையடுத்து கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ட்விட்டரை அதன் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு அந்த கட்டுரையில் வெளியிடப்பட்டிருந்தது.

author avatar
Muthu Kumar

Leave a Comment