தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த  நாட்டில் தமிழ் இருக்கும்! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி!

தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த  நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி. 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க கூடாது எனக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ் வழியில் படித்தவர்கள் என்றால், பள்ளியிலிருந்தே தமிழ் வழி கல்வி பயின்றவர்களா? அல்லது பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் நிலையில், பட்டப் படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதும் என்றால், அதன் நோக்கமே சிதைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் மறைந்து விடும் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், வேறு எந்த  நாட்டில் தமிழ் இருக்கும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில், அஞ்சல் வழியில், தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு, அரசாணையில் திருத்தம் கொண்டு வரும் வரை, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு நடத்த ஏன் தடை விதிக்க கூடாது என கேள்வி எழுப்பி, நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.