அதிமுகவை வழிநடத்த தலைமை இல்லாமல் போய்விடும்.! உயர்நீதிமன்ற தீர்ப்பு விளக்கம்.!

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தடை செய்தால், கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். – உயர்நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம். 

அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிர்ப்பு மற்றும் அதிமுக பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓபிஎஸ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் :

இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொதுச்செயலாளர் இபிஎஸ் :

இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், அதிமுக பொதுச்செயலர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி அதிகாரபூர்வமாக அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிமுகவுக்கு இழப்பு :

இந்நிலையில், தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முழு விவரம் வெளியாகியுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்தால், தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலர் பதவி இல்லாமல் போய்விடும். அப்படி செய்தால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டு கட்சியை வழிநடத்த தலைமை இல்லாமல் போய்விடும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1.5 கோடி தொண்டர்கள் :

அப்படி வழிநடத்த ஆள் இல்லை என்றால், 1.5 கோடி அதிமுக தொண்டர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர் என்றும், அதிமுக பொதுக்குழுவே கட்சியில் உச்சப்பட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும் போது அவர்கள் முடிவு செய்த இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் நீக்கம் :

பொதுக்குழு தீர்மானத்தில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சி விதிகளின் படி 7 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கம் செய்தது செல்லுமா செல்லாதா என்பது பிரதான வழக்கின் அடுத்த விசாரணையில் தெரியவரும் என உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தனது தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment