எழுதாத பேனாவுக்கு ரூ.82 கோடி செலவில் கடலில் சிலை வைக்கின்றனர் – ஈபிஎஸ்

ரூ. 2 கோடியில் சிலை வைத்துவிட்டு, ரூ. 80 கோடியை மாணவர்களுக்கு செலவிடலாமே?  என எடப்பாடி பழனிசாமி கேள்வி. 

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட நல்ல திட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது; ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மேச்சேரி – நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது; 7.5% ஒதுக்கீடு கொண்டுவந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வழிசெய்யப்பட்டது. தலைவாசல் கால்நடை பூங்கா திட்டத்தை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளது; கடந்த 2 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.

ஆனால் திமுக ஆட்சியில், வீட்டு வரி, மின் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது; மக்களின் வரிப்பணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது ஏன்?  எழுதாத பேனாவுக்கு ரூ.82 கோடி செலவில் கடலில் சிலை வைக்கின்றனர்.

ரூ. 2 கோடியில் சிலை வைத்துவிட்டு, ரூ. 80 கோடியை மாணவர்களுக்கு செலவிடலாமே? தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகாருக்கு சென்று சர்வ கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்கப் போகிறாரா? என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.