சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் திருநங்கைகள் விளையாட தடை- ஐசிசி அறிவிப்பு..!

சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று ஐசிசி அறிவித்துள்ளது. விளையாட்டின் ஒருமைப்பாட்டை பராமரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், பெண்கள் கிரிக்கெட்டில் இனி திருநங்கைகள் விளையாட முடியாது.

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அறிவிப்பானது சர்வதேச பெண்கள் விளையாட்டின் நேர்மை மற்றும் வீராங்கனைகளின் பாதுகாப்பை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த ஆண் அல்லது பெண் பருவமடைந்த பிறகு அவர் அறுவை சிகிச்சை அல்லது பாலின மறுசீரமைப்புக்கு உட்பட்டிருந்தாலும் அவர் சர்வதேச பெண்கள் விளையாட்டில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் உள்ள முக்கிய பங்கு தாரர்களுடன் 9 மாதகாலம் மேற்கொண்ட தீவிர ஆலசோனைக்குப் பிறகு இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

முதல் திருநங்கை:

Danielle McGahey என்ற திருநங்கை இந்தாண்டு தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரலேயே நாட்டில் பிறந்த இவர் கனடா நாட்டில் குடிபெயர்ந்து அந்நாட்டிற்காக விளையாடி வருகிறார். ஐசிசி அறிவித்த இந்த புதிய விதியால் இனி அவர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan