குழந்தை பிறந்த 22வது நாளில் மீண்டும் பணிக்கு திரும்பிய IAS அதிகாரி.!

ஆந்திராவில் குழந்தை பிறந்த 22வது நாளில் கடமை தான் முக்கியம் என்று மீண்டும் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீஜனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த மாதம் வரை பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் குழந்தை பிறந்த 22வது நாளில் The baby is bornமீண்டும் பணிக்கு திரும்பினார். ஸ்ரீஜனா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், காலை முதல் இரவு வரை அலுவலகத்திலேயே இருந்து அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவை பிறப்பித்து வருகிறார். குழந்தையை வீட்டில் விட்டு வருவதை குறித்து கேட்டபோது தனது தாயும், கணவரும் குழநதையை கவனித்துக்கொள்வதாகவும், குழந்தைக்கு பால்கட்டுவதற்காக 4 மணி நேரத்துக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்