அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன் – வெற்றிமாறன்.!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு சிறையில் வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு திரையுலக பிரபலங்களும் வரவேற்று இருக்கின்றனர்.

31 ஆண்டுகாலம் தன் மகனின் விடுதலைக்காக போராடி இருந்தவர் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாளை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில்,  அற்புதம் அம்மாளின் 31 வருட போராட்டத்தை ஒரு படமாக இயக்கவுள்ளதாக பிரபல இயக்குனரான வெற்றிமாறன் கடந்த ஆண்டு பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக பேசியிருந்த வெற்றிமாறன் ” பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளின் வாழ்க்கையை படமாக்க விரும்புகிறேன். அதற்கான வேலைகளும் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு தாயின் போராட்டம், நாட்டினுடைய வரலாறும் இருக்கு. 32 காலமாக நடக்கும் ஒரு அம்மாவுடைய போராட்டத்தை படமாக எடுப்பது மிகவும் சவாலானது.

இந்த படத்தில் அற்புதம் அம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கூட முடிவு பண்ணி வைத்திருக்கிறேன். சீக்கிரம் சொல்கிறேன் ” என தெரிவித்திருந்தார்.  இது தொடர்பான வீடியோ பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு வெளியாகியுள்ளது. விரைவில் அற்புதம் அம்மாளின் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here