இந்தியாவிலேயே முதல் முறை…முதியவர்களுக்கு மருத்துவ சேவை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூப்பர் அறிவிப்பு!

Ma. Subramanian

இந்தியாவிலேயே முதல் முறையாக முதியவர்களுக்கான மருத்துவ சேவை மையம் சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக சென்னையில் சைதாப்பேட்டை பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

“சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டியில் மூத்தோருக்கான மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நிலையில்,கடந்த ஆட்சியாளர்கள் அதனை தொடங்கி வைக்க சுணக்கம் காட்டினார்கள்.இதனையடுத்து,கொரோனா பேரிடர் காலத்தில் அம்மருத்துவமனை தற்காலிக கொரோனா மையமாக செயல்பட்டது. ஆனால்,கடந்த 3 மாத காலமாக எந்த கொரோனா நோயாளியும் இல்லாமல் காலி கட்டமாக இருந்து கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம்,மிக விரைவில் கிண்டி மருத்துவமனையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோருக்கான மருத்துவ சேவையை தொடங்கவுள்ளோம்.அவை ஒரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும்”,என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here