மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

எனக்கு விருது  வழங்கும் மத்திய அரசிற்கு நன்றி என்று நடிகர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “Icon of Golden Jubilee” விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.


இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,Icon of Golden Jubilee” விருதை வழங்கும் மத்திய அரசிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.