உண்மையில் நடப்பவை பற்றிதான் ‘”விக்ரம்” பட பாடலில் எழுதியுள்ளேன் -கமல்ஹாசன்.!

நாளை (14-ந்தேதி) உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் “கமல் பிலட் கம்யுன்” பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதை, தொடங்கி வைத்த நிகழ்வில் விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த “பத்தல பத்தல” பாடலின் வரிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசியுள்ளார்.

அதில் பேசிய கமல்ஹாசன் ” உலகத்தை நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்வது நம் கடமை.  உண்மையில் நடப்பவை பற்றிதான் நான் “விக்ரம் ” படத்தின் பாடலில் எழுதியுள்ளேன். ஒன்றியம் என்று நான் சாடியுள்ளது ஒரு கட்சியை மட்டும் இல்லை. அணைத்து ஒன்றியத்தையும் தான்.  எனக்கு வள்ளல் பட்டம் தேவையில்லை. நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக ஏறி வருகிறேன்.

என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை. சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான்.  நான் சினிமாவை விட்டுக்கொடுக்கவில்லை, சினிமா என் தொழில்: நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை” என்று பேசியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment