தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பவள் – குஷ்பூ விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து  பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு கண்டனங்கள் வலுத்து வந்தது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை நேரில் ஆஜராகுமாரும் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சச்சையான பேச்சு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை குஷ்பு ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் திமுக தொண்டர்கள் இப்படியான மோசமான மொழியை தான் பேசுவார்கள்.

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை குறித்து சர்ச்சை பேச்சு – காவல்துறை சம்மன்..!

சாரி என்னால் உங்களைப் போல ‘சேரி’ மொழியில் பேச முடியாது. திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத் தரவில்லை என்றால் தாங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது என பதிவிட்டு வந்தார். குஷ்புவின் இந்த பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், குஷ்பூ ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

இதுகுறித்து குஷ்பூ அளித்துள்ள விளக்கத்தில், ‘பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதை பொருள் எனவும் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.  அன்பு என்று அர்த்தத்திலேயே சேரி என்பதை பயன்படுத்தினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.