‘நான் உங்கள் பெரிய ரசிகை’ – கோரிக்கை வைத்த சிறுமியின் குடும்பத்துடன் உரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

By

Tamilnadu CM MK Stalin

மும்பை சிறுமி பிரனுஷ்கா, நான் உங்கள் பெரிய ரசிகை.. மும்பை வரும் உங்களை சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளம் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து, பிரனுஷ்காவின் கோரிக்கையை நிறைவேற்றும்  வண்ணம், அவரை குடும்பத்துடன் அழைத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பையில், பிரனுஷ்கா என்னை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றினேன்.

மணிப்பூரில் நடந்த வன்முறை அவளைப் போன்ற ஒரு பள்ளிச் சிறுமியைக் கூட எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உழைக்க அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு தெளிவான நினைவூட்டல். ஐஏஎஸ் அதிகாரியாகும் பிரனுஷ்காவின் கனவு நனவாகட்டும்.’ என  பதிவிட்டுள்ளார்.