அசத்தலான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

நமது அன்றாட வாழ்வில் தினந்தோறும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அந்தவகையில், தற்போது இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடிய பலகாரமான, பால்கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • அரிசி மாவு – 1 கப்
  • பாசிப்பருப்பு – 50 கிராம்
  • கருப்பட்டி – தேவையான அளவு
  • நெய் – சிறிதளவு
  • பால் – அரை கப்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • தேங்காய் பூ – சிறிதளவு
  • தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை

முதலில் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பாசி பருப்பை இதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு தண்ணீரில் கழுவி, குலைய வேக வைக்க வேண்டும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுள் அரிசி மாவை சேர்த்து, நன்கு கிளற வேண்டும். அது கெட்டியானவுடன் இறக்கி, நெய் சேர்த்து பிணைந்து, பின் சிறு சிறு நீள்வட்ட வடிவில் உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் துருவலில் பால் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் மீண்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுள் கொழுக்கட்டையை போட்டு வேக விட வேண்டும். பின் அதனுள் பருப்பு, கருப்பட்டி கலவை, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். பின் இறக்கி பரிமாற வேண்டும். இப்பொது சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.