வெயிலுக்கு இதமான சுவையான மசாலா மோர் செய்வது எப்படி ?

வெயிலுக்கு இதமான சுவையான மசாலா மோர் செய்வது எப்படி ?

 • food |
 • Edited by leena |
 • 2019-04-09 07:40:18
 • சுவையான மசாலா மோர் செய்வது எப்படி?
கோடைகாலம் தொடங்கினாலே நாம் அதிகமாக வெயிலுக்கு இதமான, குளிர்ச்சியான பானங்களை தான் குடிக்க வேண்டும் என்று விரும்புவோம். தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

 • கட்டித்தயிர் - 1 கப்
 • புதினா - 2 அல்லது 3
 • இஞ்சி - சிறு துண்டு
 • பச்சைமிளகாய் - 1
 • தண்ணீர் - 2 கப்
 • சாத் மசாலா - ஒரு சிட்டிகை
 • சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
 • உப்பு - சிறிதளவு

செய்முறை

Related image   முதலில் தயிரை மிக்சியில் ஊற்றி, அதனுடன் புதினா, இஞ்சி, பச்சைமிளகாய், சாட் மசாலா, சீரகத் தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால்  கியூப் போட்டு பருக நன்கு குளிர்ச்சியாக இருக்கும்.

பயன்கள்

இதில் புதினா அல்லது கொத்தமல்லி சேர்க்கலாம். புதினாவின் வைட்டமின் சி உள்ளதால், உடலுக்கு உற்சாகமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். வெயிலில் நாம் வெயிலில் வெளியில் செல்லும் போது, நம் உடம்பிலுள்ள உப்பு சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. அந்த உப்பினை இந்த மோரில் சேர்க்கக் கூடிய உப்பு ஈடு செய்து விடும்.

Latest Posts

ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!
விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!
#BREAKING: தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்.!
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி துவக்கம்..!
3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி