காரசாரமான கத்தரிக்காய் சாம்பார் எப்படி செய்வது …?

சாம்பார் பெரும்பாலும் அனைவருக்குமே செய்யத் தெரியும். ஆனால் கத்தரிக்காயை மட்டும் வைத்து எப்படி அட்டகாசமான சுவை கொண்ட சாம்பார் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய்
  • துவரம் பருப்பு
  • பெருங்காயத்தூள்
  • மஞ்சள்தூள்
  • கடுகு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • பச்சை மிளகாய்
  • கடலைப்பருப்பு
  • உளுத்தம்பருப்பு
  • வெந்தயம்
  • தேங்காய்

செய்முறை

வறுக்க : முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, எண்ணெய், வெந்தயம், கடுகு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்தல்: துவரம்பருப்பை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் இதில் சீவி வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குழம்பு : கத்தரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். பின் வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.

தாளிக்க : பின் கருவேப்பிலை மற்றும் கடுகை தாளித்து இதனுடன் சேர்க்கவும். தேவைப்பட்டால் முருங்கைக்காயை சேர்த்து கொள்ளலாம். அவ்வளவு தான் அட்டகாசமான கத்தரிக்காய் சாம்பார் தயார்.

author avatar
Rebekal