மணமணக்கும் அட்டகாசமான நெத்தலி மீன் குழம்பு செய்வது எப்படி…?

மீன் குழப்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதிலும் நெத்திலி மீன் குழம்பு என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் இதை எப்படி அட்டகாசமான சுவையுடன் எளிதில் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • நெத்திலி மீன்
  • மிளகாய்த் தூள்
  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • பூண்டு
  • தனியா தூள்
  • தேங்காய் பால்
  • கடுகு
  • வெந்தயம்
  • எண்ணெய்
  • கொத்தமல்லி
  • உப்பு
  • சோம்பு
  • புளி

செய்முறை

அரைக்க : முதலில் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து நன்றாக விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தாளிக்க : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

குழம்பு : பின் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து நன்றாக தக்காளி வதங்கியதும் கரைத்த புளியை ஊற்ற வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின் மீனை சேர்த்து மிதமான தீயில் வைத்து லேசாக கொதி வந்ததும் இறக்கி விடவும். அவ்வளவுதான் அட்டகாசமான நெத்திலி மீன் குழம்பு தயார்.

author avatar
Rebekal