வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி?

வாழைக்காய் -வாழைக்காய் வைத்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • வாழைக்காய் =3
  • துவரம்பருப்பு =1 ஸ்பூன்
  • மிளகு =2 ஸ்பூன்
  • தனியா =1/2 ஸ்பூன்
  • சீரகம் =1 ஸ்பூன்
  • சோம்பு =1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் =2
  • சின்ன வெங்காயம் =10
  • பூண்டு =4 பள்ளு
  • துருவிய தேங்காய் =3 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • நல்லண்ணெய் =5 ஸ்பூன்

செய்முறை:

வாழைக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி தோலுடன் வேகவைத்து கொள்ளவும். 50 சதவீதம் வேக வைத்தால்  போதுமானது ,பிறகு அதை ஆறவைத்து துருவி எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு, தனியா ,மிளகு, சீரகம் ,சோம்பு  ஆகியவற்றை மிதமான தீயில்  வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெங்காயம், கருவேப்பிலை ,பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பாதி வெந்தால் போதுமானது ,இப்போது  துருவி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து கிளறி விடவும்.

வாழைக்காய் முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு மற்றும் நம் பொடித்து  வைத்துள்ள பவுடரையும் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி விடவும். பிறகு தேங்காய் துருவலையும், கொத்தமல்லி இலைகளையும் தூவி 1 நிமிடம்  கிளறி இறக்கினால் சுவையான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.