அசத்தலான சுவையில் அடை தோசை செய்வது எப்படி?

Adai Dosa Recipe-அரிசி ஊற வைக்காமலே ரவையை வைத்து அடை தோசை  செய்வது எப்படி என பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

  • ரவை =1 கப்
  • பச்சரிசி மாவு =அரை கப்
  • காய்ந்த மிளகாய் =4-5
  • சோம்பு =1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் =5
  • கேரட் =1 [பெரியது ]
  • பெரிய வெங்காயம் =2
  • கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு

செய்முறை:

சோம்பு ,காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த விழுதில் ஒரு கப் அளவு ரவையை சேர்த்து அதிலே சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி பச்சரிசி மாவும் சேர்த்து  கட்டி இல்லாமல் கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைத்து விடவும். பின்பு அதில் பெரிய வெங்காயம் ,துருவிய கேரட், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நன்கு கலந்து விட்டு, உப்பு மற்றும் தோசை ஊற்றுவதற்கு ஏற்ப தண்ணீரும் சேர்த்து கலந்து, தோசை கல்லில் ஊற்றி எடுத்தால்  அசத்தலான சுவையில் அடை தயாராகிவிடும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.