மணம் கமழும் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி ?

மண மணக்கும் உருளை கிழங்கு வடை மாலை நேரங்களில் நாம் தேநீர் மற்றும் காபிக்கு வைத்து சாப்பிடக்கூடிய மிக சிறந்த ஸ்னாக்ஸ். இதனை குழந்தைகளும் விரும்புவார்கள்.

  • மணம் கமழும் உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது ?

மணம் கமலும் உருளைகிழங்கு வடை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – அரை கிலோ

கடலை மாவு – நான்கு டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி – 1 துண்டு

செய்முறை:

 

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, மசித்து எடுத்து கொள்ளவும். பிறகு இஞ்சி மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, கொத்தமல்லி இலை, கடலை மாவு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து  கெட்டியாக பிசைந்து  பிசைந்து எடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை  சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுக்கவும்.இப்போது சூடான சுவையான உருளைக்கிழங்கு வடை தயார்.

Leave a Comment