பள்ளிக்காக கையேந்தும் அரசு எப்படி இலவசம் மட்டும் தர முடியும்.? – சீமான்

பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற இலவச பொருட்கள் வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன் என சீமான் பேட்டி. 

சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வளசரவாக்கத்தில் உள்ள கக்கன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற இலவச பொருட்கள் வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன்.  பொங்கலுக்கு ரேஷனில் கரும்பு தரவேண்டும் என கூறுவதை நான் ஏற்கவில்லை. பொங்கலுக்கு ஒரு முழம் கரும்பு தரவில்லை என்றால் என்ன ஆகிவிடப் போகிறது.

மன்னர் ஆட்சியில் வாரிசு அரசியல் என்பது போருக்கு செல்ல உதவும். இங்கு ஆனால் அப்படி இல்லையே. பள்ளிக்கூடம் கட்டுவதற்கு மக்களிடம் பிச்சை எடுக்கும் அரசிற்கு எதற்காக ஏர்போர்ட். விளை நிலங்களை பறித்து எதற்காக விமான நிலையம். பரந்தூரில் விமானநிலையம் வேண்டும் என்று கேட்டு மக்கள் போராடினார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment