ஒரு வார்த்தையில் தோனியை புகழ்ந்து கூறிய விராட் கோலி..!!

நம்பிக்கை மற்றும் மரியாதை என்றால் அது தோனி தான் என்று விராட் கோலி  தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் எஞ்சியுள்ள 31 போட்டிகள் கொண்ட ஐபில் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தின், குவைத், சார்ஜா மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்  விராட் கோலி மற்றும் தோனி இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள். தற்போது  விராட் கோலி தல தோனியுடனான நட்பை பற்றி ஒரு வார்த்தையில் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கேப்டன் விராட் கோலி பதிலளித்து வந்தார் அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கும் தோனிக்கும் இடையேயான நட்பை பற்றி ரசிகர் ஒருவர் கேட்டதிற்கு விராட் கோலி கூறியதாவது ” நம்பிக்கை மற்றும் மரியாதை என்றால் அது தோனி தான்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.