இனி ஹாங்காங்கிற்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது.! டிரம்ப் அதிரடி.!

ஹாங்காங் சீனாவில் சிறப்பு அந்தஸ்து கொண்ட மாகாணமாக  உள்ளது. இந்நிலையில், இதன் சிறப்பு அந்தஸ்த்தை நீக்க சீனா முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஹாங்காங்கில் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டம் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டு உள்ள தன்னாட்சி அதிகாரத்தை நீக்கும் சட்டம் என்று பார்க்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வந்தது. இந்தச் சட்டத்தால் ஹாங்காங்கில் இயங்கிவரும் 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும்.மேலும், ஹாங்காங்கிற்கு தற்போது அமெரிக்க குடிமக்கள் விசா இல்லாமலேயே பயணம் மேற்கொள்ளகொண்டு வருகின்றனர்.

ஆனால், இந்தச் சட்டத்தால்  சீனாவின் விசா விதிமுறைகளை கடைபிடிக்கும் நிலைமை வரும், ஹாங்காங்கில் இருக்கும் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதித்து வருகிறது. இந்தச் சட்டத்தால் வரி அதிகரிக்கப்படும் .

இந்நிலையில்,  சீனாவின் சிறப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில ஹாங்காங்கிற்கு அமெரிக்கா வழங்கி வந்த சிறப்பு அதிகாரம், சலுகையை  நீக்குவதாக டிரம்ப் அறிவித்தார். ஹாங்காங் தனி அதிகாரம் என்பதால் அவர்களுடன் கூடுதல் வர்த்தகம் செய்யவும், ஹாங்காங்கிற்கு நிறைய சலுகைகளை வழங்கவும் ஹாங்காங் – அமெரிக்கா இடையில்  1992-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 28 வருடங்களுக்கு பின் டிரம்ப் அதை நீக்கி உள்ளார்.

இது குறித்து பேசிய டிரம்ப், இனி ஹாங்காங்கிற்கு சிறப்பு அந்தஸ்து எதுவும் கிடையாது. சீனாவை எப்படி அணுகுகிறோமோ அதேபோலத் தான் இனி ஹாங்காங்கை அணுகுவோம் என கூறினார்.

 

author avatar
murugan