எலும்பு தேய்மானமா குணப்படுத்தும் பிரண்டை வீட்டு வைத்தியம்….!

பிரண்டை இந்த மூலிகையை நாம் கடைகளில் மற்றும் கிராமபுறங்களில் பெரும்பான்மையான  இடங்களில் நாம் பார்த்துத்திருப்போம் .அதனுடைய வடிவமைப்பு மிகவும் வித்தியாசமானது.
அது சங்கலி போன்ற வடிவமைப்புடன் காட்சி அளிக்கும்.மூட்டுவலி, எலும்புத்தேய்மானம், நரம்பு முடிச்சுகளில் உள்ள வலி ஆகியவற்றை குணப்படுத்தும் மிக அற்புதமான மூலிகை ஆகும்.  தை திருநாளில் பிரண்டையை வாசலில் கட்டி தொங்க விடுவார்கள்.அதனுடைய காற்று நம் மீது பட்டால் நோய்கள் நம்மை அண்டாது. சூரியனிடமிருந்து நேரடியாக கால்சியம் சத்தை பெற்று நமக்கு கொடுக்கிறது. இதில் கால்சியம் சத்து நேரடியாக கிடைப்பதால் நமக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. வாரத்திற்கு  மூன்று நாள்கள் பிரண்டையை நாம் சாப்பிடவேண்டும்.இப்போது பிரண்டை துவையல் அரைப்பதற்க்கான செய்முறைகளை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பிரண்டை
புதினா
கொத்தமல்லி -சிறிதளவு
புளி -சிறிதளவு
பூண்டு -6 பல்
மிளகாய் வற்றல் -4
நெய் -சிறிதளவு
உளுந்து -3தேக்கரண்டி
கறிவேப்பிலை
 
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய்  ஊற்றி அதில் முதலில் வற்றலை வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும் .இதே போல் புளியையும் நெய்யில் போட்டு பொறித்து எடுத்து கொள்ளவும்.அதன் பின்பு உளுந்தை நன்கு வதக்க வேண்டும் வதங்கியவுடன் அதை தனியே எடுத்து வைத்து கொள்ள வேண்டும் .
உளுந்து பாதி  வதங்கியவுடன் அதில் கறிவேப்பிலை இலைகளை போட வேண்டும் நன்கு வதங்கியவுடன் அதை தனியே எடுத்து வைத்து கொள்ள வேண்டும் .பின்பு பிரண்டையை சுத்தம் செய்து அதையும் நெய் ஊற்றி வதக்க வேண்டும்.
பிரண்டையை சுத்தம் செய்யும் போது கையில் தேங்காய் எண்ணெய் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். பிரண்டை நன்கு வதங்கியவுடன் அதை தனியே எடுத்து வைத்து கொள்ள வேண்டும் .அதன் பிறகு கொத்த மல்லி மற்றும் புதினா இலைகளை போட்டு வதக்க வேண்டும் .அவை அனைத்தும் ஆறிய பின்பு மிக்ஸில் போட்டு அரைக்க வேண்டும்.இப்போது பிரண்டை துவையல் ரெடி .
 

Leave a Comment