கோவில்பட்டியில் நடைபெற்று வரும் தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் – தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் அணிகள் வெற்றி

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் மண்டல அளவில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமாரி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியின் 2வது நாள் முதல் ஆட்டத்தில் தூத்துக்;குடி – கன்னியாகுமரி மாவட்ட ஹாக்கி அணிகள் மோதின. போட்டி தொடங்கியது மோதல் முடியும் வரை தூத்துக்குடி வீரர்கள் சிறப்பாக ஆடி கோல்களை அடித்தனர். போட்டியில் இறுதியில் 20 – 0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் விருதுநகர் – சிவகங்கை மாவட்ட ஹாக்கி அணிகள் மோதின. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே விருதுநகர் அணியின் ஆதிக்கம் இருந்தது, இறுதியில் 16 – 0 என்ற கோல் கணக்கில் விருதுநகர் அணி வெற்றி பெற்றது. 3வது போட்டியில் நெல்லை – கன்னியாகுமாரி அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே நெல்லை அணியின் கோல் மழை பொழிய தொடங்கினர். நெல்லை அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினர். நேல்லை அணி வீரர்களுக்கு கன்னியாகுமரி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை, இறுதியில் 27 – 0 என்ற கோல் கணக்கில் நெல்லை அணி வெற்றி பெற்றது. 4வது போட்டியில் தூத்துக்குடி – சிவகங்கை மாவட்ட ஹாக்கி அணிகள் மோதின. போட்டியின் தொடக்க முதலே தூத்துக்குடி அணி வீரர்கள் போட்டியை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர். அடுத்தடுத்து கோல் மழை பொழிந்து, இறுதியில் 24 -0 என்ற கோல்கணக்கில் தூத்துக்குடி அணியினர் வெற்றி பெற்றன

author avatar
Dinasuvadu desk

Leave a Comment