சென்னை உருவான வரலாறு!

தமிழ்நாட்டின் தலைநகரம் தான் சென்னை. தற்போது இந்த சென்னை பல வளங்களை தன்னகத்தே கொண்டு, பல மக்களுக்கு வாழ்வளித்த வருகிறது. இந்த சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும், கிபி.1639, ஆகஸ்ட் 22-ம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற சிறப்பு நாள் தான் இந்த சென்னை தினம்.

இந்நிலையில், கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து, ஒரு சிறு நிலத்தை வாங்கி, சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த அந்த நாளை கொண்டாடுவதை தான் சென்னை தினம் என கொண்டாடுகிறோம்.

மேலும், வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.