#BREAKING: ஹிஜாப் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனக் கல்வி நிறுவனங்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு செல்ல  அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு  கர்நாடக உயர்நீதிமன்றத்தில்  மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் விசாரணை முடியும் வரை  மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. ஹிஜாப் தடை தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசியமான விஷயம் அல்ல என தெரிவித்தது.  இந்நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மாணவிகளில் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

author avatar
murugan