தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி – ஐகோர்ட் உத்தரவு

காவல் துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக 47 இடங்களுக்கு உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை ஆகிய இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.

6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காத்திருக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உள்ளரங்கு கூட்டரங்கு பதிலாக விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டனர். காவல்துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment