யூகலிப்டஸ், சில்வர்ஓக் வெளிநாட்டு மரங்களை அகற்ற..!ஆய்வுக்குழுவை அமைத்து..! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி..!

தமிழக வனங்களில் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய யூகலிப்டஸ் மற்றும் சில்வர்ஓக் போன்ற வெளிநாட்டு மரங்களை அகற்றுவதற்கான ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு  ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் இந்த வகை மரங்கள் எல்லாம் நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சுவதால் இதனால் மலைப்பகுதியில் உள்ள 60 முதல் 70 சதவீத மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையிலான நிபுணர் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள்  இந்த குழுவானது 2 மாதங்களுக்குள் தங்கள் பரிந்துரை அளிக்கவும் இதன் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

author avatar
kavitha

Leave a Comment