ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (18-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,680க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,835க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.90க்கும், கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (17-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ரூ.54,960-க்கும், கிராமுக்கு  ரூ.6,870-க்கும் விற்பனையானது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.90-க்கும், கிலோ ரூ.500 குறைந்து ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.