தத்தளிக்கும் துபாய்…2வது நாளாக சென்னை டூ எமிரேட்ஸ் விமான சேவை ரத்து.!

Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் துபாயில் ஒருவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அதே போல அண்டை நாடான ஓமனில் 18 பேர் உயிரிழந்தனர்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினத்தை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 2வது நாளாக விமான சேவை ரத்து செய்யப்பட்டள்ளது.

இரண்டாம் நாளாக இன்று சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

ஆம், துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்து விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.