மங்குஸ்தான் பழத்தின் மகத்தான மருத்துவகுணங்கள் இதோ!

பொதுவாக பழங்கள் உடல் நலத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல் அதில் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளது. இதில் முக்கியமாக மங்குஸ்தான் பழத்தில் பல நன்மைகள் உள்ளன. மங்குஸ்தான் சிவப்பு நிறம் கருநீலம் நிறம் ஆகிய இரு நிறங்கள் கலந்த உருண்டை வடிவத்தில் காணப்படுகிறது. பார்க்க மிக அழகாகவும், சுவைப்பதற்கு அட்டகாசமாக இருக்கும் இந்த பழத்தில் சுவை மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் பல உள்ளன.

மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்கள்

ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை சீசன் காணப்படும் இந்த மங்குஸ்தான் பழத்தில் 100 கிராம் சதைப்பற்றில் மட்டும் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. தேவையற்ற கெட்ட கொழுப்புகள் இந்த பழத்தில் கிடையாது. எளிதில் ஜீரணமாகக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதால் எடை குறைவாக உள்ளவர்கள் நிச்சயமாக விரும்பும் அளவுக்கு எடை அதிகரிக்கலாம்.

இந்த பழத்தில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளது. அதிக அளவு வைட்டமின் சத்து கொண்ட இந்த பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் ப்ளூ காய்ச்சல் எனப்படும் அரிய வகை நோய்களுக்கு நம் உடலை விலக்கி காக்கலாம். உடல் செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுக்குள் இருக்கவும் இந்த மங்குஸ்தான் பழத்தில் காணப்படும் பொட்டாசியம் தாது மிகவும் உதவி செய்கிறது. அது மட்டுமல்லாமல் பக்கவாதம் மற்றும் இதய வியாதிகள் வராமல் இந்த பழம் காக்கும் தன்மை கொண்டது.