சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை – 4 சுரங்கப்பாதைகள் மூடல்!

சென்னையில் கனமழையால் 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டது என்று பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவல்.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டது என்று பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை,மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப்பாதை மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள் மெதுவாக செல்கிறது என்று கூறியுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை மழை என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அதை சீர் செய்யும் பணி நடக்கிறது என்றும் சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது எனவும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்தார். கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்