கனமழை; தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! 7 மாவட்டங்களில் இன்று விடுமுறை!

கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

கடந்த 29-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆங்காகே விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கனமழையால் இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாடு பகுதிகள் மற்றும் வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment