வளிமண்டல சுழற்சி… தமிழகத்தில் இந்தந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…

நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும் மற்ற குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், தற்போது, வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. \

மேலும், வரும் 7ஆம் தேதி புதிய வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment