முதலில் யாருக்கு கொரோனா தடுப்பூசி? – பிரதமர் மோடி விளக்கம்

இந்தியா சார்ப்பில் கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிலையில்,முதலில் யாருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று  பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் தான் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.காணொளி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனையில்,மக்களவை,மாநிலங்களவை தலைவர்கள் ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ,உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பங்கேற்றுள்ளார்.இந்த அனைத்து கூட்டத்தில் இந்தியா தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசுகையில் ,இந்தியாவில் 8 கொரோனா தடுப்பூசிகள் 3ம் கட்ட சோதனையில் உள்ளது.அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்நிலை பணியாளர்கள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.தடுப்பு மருந்து விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.