நாட்டில் அனைத்து இடங்களிலும் சுகாதார நிலையம் – பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றியுள்ளது என பிரதமர் மோடி பேச்சு.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவும், ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் விரைவில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும். உலகம் முழுவதும் பாதிப்பின்றி வர்த்தகம் நடைபெற சுயசார்பு இந்தியா திட்டம் உதவும் என தெரிவித்தார்.

மேலும், இந்தியா ‘மேட் இன் இந்தியா’ கொரோனா தடுப்பூசிகளை 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கியுள்ளது என்றும் கூறினார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment