இன்றைய தலைப்புச் செய்திகள்.! வெளியூர் முதல் உள்ளூர் வரை.!

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது. 

  • உலகளவில் கொரோனா வைரசால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,085,666 பேர் ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 329,736 பேர் ஆகவும் உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 2,021,673 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க.. 
  • இந்தியாவில் 112,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். மேலும் படிக்க..
  • உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல். மேலும் படிக்க..
  • நேற்று மாலை கரையை கடந்த அம்பன் புயலால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ள  நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த புயலால் இதுவரை 10-12 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..
  • ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ரயில்களுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரயில் சேவை இடம்பெறவில்லை. மேலும் படிக்க..
  • சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 1,538 பேர் கொரோனாவால் பாதிப்பு கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192 ஆக உயர்வு. திரு.வி.க. நகரில் 976ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  • அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல். ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
  • புதுச்சேரி – காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம். கடலூர், நாகையில் பயணிகள் ஏறவோ, இறங்கவோ அனுமதி மறுப்பு.
  • அமெரிக்க நடிகர்களை விட மேன்மையான திறமையான நடிகர் கமல்ஹாசன் என ஹாலிவுட் நடிகை மெக்கன்சி வெஸ்ட்மோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது தந்தையுடன் சிறு வயதில் கமலை பார்த்து பிரமித்து போனதாக தெரிவித்துள்ளார்.
  • கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
  • மதுரை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று, மட்டும் மதுரையில் முகக்கவசம் அணியாத 500 பேருக்கு ரூ.59,800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் படிக்க..
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்