ஆம்பன் புயலால் 12 பேர் உயிரிழப்பு – மேற்கு வங்க முதல்வர்

அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 10-12 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

இந்த புயலால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ள  நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 10-12 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார். 

 மேலும், அரசியலை மறந்து மக்களை காக்க இணைந்து பணியாற்றுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்  என்றும், கோவிட் 19 வைரஸை விட அம்பன் புயலால் ஆபத்து அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.