தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி யு.டி சால்வி நியமனம்

 

 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தற்காலிக தலைவராக நீதிபதி யு.டி சால்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இயற்கை வளங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரைவில் விசாரணை செய்ய இந்த தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த ஸ்வதந்தர் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து நீதிபதி யு.டி சால்வியை தற்காலிக தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நீதிபதி யு.டி சால்வி அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வரை தலைவராக செயல்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

source: dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment