இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமுதாய பரவலை எட்டிவிட்டதா ? மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமுதாய பரவல் நிலையை எட்டவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மேலும் வெளியில் வரும் நபர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

இருந்தாலும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து தான் வருகிறது.தற்போதை நிலவரப்படி  49,391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1694ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 14,183பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.ஆனால் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில்,இந்தியாவில் கொரோனா பாதிப்பு, சமுதாய பரவல் நிலையை எட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் அரசு பொருளாதாரம்,சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு சம நிலையில் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.