Gujarat:பாஜகவில் இணைந்தார் ஹர்திக் படேல் காவித்துண்டு அணிவித்து வரவேற்பு !

குஜராத்:ஹர்திக் படேல், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் “ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது” மற்றும் “சிறிய சிப்பாயாக” பணியாற்றுவது குறித்து ட்வீட் செய்திருந்த நிலையில் பாஜகவில் இணைந்தார்.

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல் குஜராத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் குஜராத்தின் காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜகவில்  தன்னை இணைத்துக்கொண்டார். 28 வயதான அவருக்கு காவி துண்டு அணிவித்து மற்றும் தொப்பியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜகவில் இணைவதற்கு முன்னதாக ஹர்திக் படேல் தனது ட்விட்டர் பதிவில், “தேசிய நலன், மாநில நலன், பொதுநலன், சமூக நலன் ஆகிய உணர்வுகளுடன் இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன். உன்னதமான சேவையில் சிறு சிப்பாயாக பணியாற்றுவேன். இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டுக்கு” என்று பதிவிட்டிருந்தார்.

28 வயதான படேல், 2015 ஆம் ஆண்டு தனது பட்டேல்
சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.இந்த போராட்டத்தின் விளைவாக நாடுமுழுவதும் பேசப்படும் நபராக தெரிந்தார் ஹர்திக் படேல்.அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து இவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன்  மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஹர்திக் பட்டேல், குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன்னை ஓரங்கட்ட நினைப்பதாகவும் குஜராத்தின் உண்மையான பிரச்சினைகளில் மூத்த தலைமை அக்கறையற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார் இதனையடுத்து கடந்த மே 18 ம் தேதியன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ள நிலையில், இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன் என்று ட்வீட் செய்திருந்த ஹர்திக் படேல் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment